மீண்டும் ஒரு பேய் படத்தில் த்ரிஷா: மாதேஷ் இயக்குகிறார்

மீண்டும் ஒரு பேய் படத்தில் த்ரிஷா: மாதேஷ் இயக்குகிறார்
Updated on
1 min read

மாதேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு பேய் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா.

சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை 2' பேய் படத்தில் நடித்தார் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து தற்போது 'நாயகி' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா உடன் கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயபிரகாஷ், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை கோவி இயக்கி வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இப்படத்தை மாதேஷ் இயக்கவிருக்கிறார்.

'சிங்கம் 2' படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ப்ரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. த்ரிஷாவுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in