

சாமி இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான 'மிருகம்' படத்தின் 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மப்ரியா, சோனா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் 'மிருகம்'. அதிகமான ஆபாச வசனங்கள், கதைக்களம் உள்ளிட்ட விஷயங்களில் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. சாமி இயக்கவிருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்க இருக்கிறார். யார் நாயகன், நாயகி உள்ளிட்ட விஷயங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
அனைத்து நடிகர், நடிகைகள் முடிவான உடன், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.