இயக்குநர் ஹரியுடன் கைகோக்கும் ஜெயம் ரவி? - விரைவில் அறிவிப்பு

இயக்குநர் ஹரியுடன் கைகோக்கும் ஜெயம் ரவி? - விரைவில் அறிவிப்பு
Updated on
1 min read

'யானை' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியின் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' திரைப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, சிநேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரி தனது அடுத்தப் படத்திற்கான கதையை ஜெயம் ரவியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 'பொன்னியின் செல்வன்' 'அகிலன்' அஹ்மத் இயக்கும் 'ஜன கன மன', படங்களைத் தொடர்ந்து ஹரியுடன் ஜெயம் ரவி கைகோக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'யானை' படம் வெளியான பிறகு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in