Published : 20 May 2022 06:53 AM
Last Updated : 20 May 2022 06:53 AM

ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

சென்னை: நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி திருமணம் சென்னையில் நடந்தது. திரையுலகினர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’, ‘கிளாப்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி.

‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கோ-2’, ‘கலகலப்பு-2’, ‘சார்லி சாப்ளின்-2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நேற்று அதிகாலை நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவிஸ்ரீ பிரசாத், நடிகர்கள் விஜயகுமார், ஜீவா, அருண்விஜய், ஆர்யா, பாக்யராஜ், பூர்ணிமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x