சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தின் முதல் கண்ணோட்டம் வெளியீடு

சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தின் முதல் கண்ணோட்டம் வெளியீடு
Updated on
1 min read

சாய் பல்லவியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் 'கார்கி' படத்தின் முதல் கண்ணோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் 'கார்கி'. இந்தப் படத்தை ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் புரொடக்ஸன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3 மொழிக்கான டப்பிங்கையும், அவர் தனது குரலிலேயே பேசியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், சாய் பல்லவியின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் சாய் பல்லவி கம்பீரமாக நிற்க பின்ணணியில் நீதி தேவதை ஒரு கையில் தராசுடனும் மறு கையில் வாளுடனும் காணப்படுகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in