

தோற்றம், நடிப்பு இரண்டிலுமே அதிகம் கவரக்கூடியவர்கள் மலையாளப் பெண்கள் என்ற கோலிவுட்டின் நிகழ்கால மாயையை முதல் படத்திலேயே அடித்து நொறுக்கிய ஆந்திரப் பெண் அஞ்சலி. சின்ன பட்ஜெட் தெலுங்குப் படங்களின் வழியாக திரையுலகில் நுழைந்து, பிறகு ‘கற்றது தமிழ்’ படத்தில் ஆனந்தியாக அறிமுகமாகி தமிழ்ரசிகர்களால் யதார்த்த நாயகியாக அடையாளம் காணப்பட்டார் இவர்.
‘விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை யைப் பேசும் கதைகளா? கூப்பிடு அஞ்ச லியை’ என்று சொல்லும் அளவுக்கு அழகும் கண்ணீரும் ஒரு புள்ளியில் சந்திக்கும் எளிய கதாபாத்திரங்களில் தன்னை கரைத்துக் கொள்வது அஞ்சலிக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதுபோல.
வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படத்தில், அறியப்படாத ‘பேரங்காடி விற்பனைப் பணிப்பெண்களின் உலகை கண்முன் நிறுத்தினார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சினிமாவில் அவர் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்த போதுதான் அவரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கின.
அஞ்சலிக்கும், அவரது சித்தி பாரத தேவிக்கு நெருக்கமானவராகச் சொல்லப் பட்டுவந்த இயக்குநர் களஞ்சியத்திற்கும், இடையே வெடித்த கொடுக்கல் வாங்கல்தான் அவரது சினிமா வாழ்க்கையை பாதித்தது. தமிழ்த் திரைப் படங்களில் நடித்ததன் மூலம் அஞ்சலி ஈட்டிய வருமானமும், சேமிப்பும் சிலரால் அபகரிக்கப்பட்டதாக அஞ்சலி அரசல் புரசலாக தமிழ் மீடியாக்களிடம் சொல்ல, அதைத்தொடர்ந்து அஞ்சலி விவகாரம் சூடுபிடித்தது.
இதனால் அஞ்சலி மீது கோபமடைந்த இயக்குநர் களஞ்சியம், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு விசாரணையை தைரியமாக எதிர்கொண்ட அஞ்சலி, அந்த வழக்கிற்கு தடை வாங்கிய கையோடு ஹைதரா பாத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கே தாம் எங்கே வசிக்கிறோம் என்பதை மட்டும் படுரகசியமாக வைத்திருந்த அஞ்சலி, மறைந்து மறைந்து தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் அவரது சித்தி பாரத தேவியுடன் சமாதானம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்த நேரத்தில்தான் ‘நான் இயக் கும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வந்த அஞ்சலி, அந்த படத்தை பாதியில் அம்போ என்று விட்டு விட்டார். இதனால், எனக்கு பெரும் நஷ்டம்’ என்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என பல இடங் களிலும் புகார்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் களஞ்சியம்.
களஞ்சியம், அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என்றும் அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க விடாமல் தடுப்பேன் என்றும் சமீபத்தில் பேட்டியளித்திருந்த நிலையில் அது பற்றிய செய்தி வெளிவந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அஞ்சலி அதற்கு பதிலடி கொடுத்தார்.
“நான் அனைத்து பிரச்சினைகளிலிருந் தும் விடுபட்டு விட்டேன். அதோடு, சமீபத்தில்தான் நான் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பையும் எந்த பிரச்சினை யும் இல்லாமல் முடித்துக் கொடுத்தேன். இப்போது புனித் ராஜ்குமாருடன் ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன்.
என்னுடைய படத்தின் படப்பிடிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த இடைஞ் சலும் கொடுத்தது கிடையாது, அதனால்தான் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கின் றனர்.
என்னை வைத்து யார் படமெடுக்க விரும்பினாலும் அவர்கள் எதற்கும் கவலைப் படத் தேவையில்லை. முன்பிருந்த மாதிரியும், இப்போதும் என்னுடைய கதாபாத்திரத் திற்கேற்ப நடித்துக் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார் அஞ்சலி.
இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அஞ்சலிக்கு நிழலாக இருந்து அவருக்கு தன்னம்பிக்கை தந்துவரும் அந்த நிழல் யாரென்பதுதான் தற்போது கோடம்பாக்கத் தைக் குடையும் கேள்வி. அவர் அஞ்சலியின் காதலராகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். ‘சேட்டை’ படத்தில் நடித்தபோது அஞ்சலி யைத் துரத்திய பிரச்சினைகளால் ஏகத்துக் கும் எடை கூடியிருந்த அஞ்சலி, இப்போது அவரது தங்கைபோல ஒல்லியான உடலு டன் முன்பை விட அழகாக திரும்ப வந்திருக் கிறார்.
விரைவில் கார்த்தி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஞ்சலியின் நிழல் ஆதரவாளர் தந்திருக் கும் பாதுகாப்பில்தான் அஞ்சலி இப்படி ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யார் அந்த நிழல்? சில காலம் கழித்து அஞ்சலியே இதற்கான பதிலைக் கூறுவார் என்று எதிர்பார்ப்போம்.
அஞ்சலியைத் துரத்திய பிரச்சினைகளால் ஏகத்துக்கும் எடை கூடியிருந்த அஞ்சலி, இப்போது அவரது தங்கைபோல ஒல்லியான உடலுடன் முன்பை விட அழகாக திரும்ப வந்திருக்கிறார்.