‘நானே வருவேன்’ அப்டேட்: இரட்டை வேடத்தில் தனுஷ்

‘நானே வருவேன்’ அப்டேட்: இரட்டை வேடத்தில் தனுஷ்
Updated on
1 min read

செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நானே வருவேன்’. வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் படக்குழு ‘நானே வருவேன்’ படம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் ரகசியம் வந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in