

18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது
சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார்.
தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதற்கட்ட பணிகளுக்காக படக்குழு லண்டன் சென்றிருந்தது. இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்று அங்கு படத்துக்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசைப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இப்படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. 2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு - பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.