கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’
Updated on
1 min read

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்துக்கு ‘நிறங்கள் மூன்று’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் கார்த்திக் நரேன். இப்படத்தில் அதர்வாக நாயகனாக நடிக்கிறார். அவருடன் சரத்குமார், ரஹ்மான், சின்னி ஜெயந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். ‘நிறங்கள் மூன்று’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in