சிக்கல்களுக்குத் தீர்வு: வெளியீட்டுக்குத் தயாரான ‘சதுரங்க வேட்டை 2’

சிக்கல்களுக்குத் தீர்வு: வெளியீட்டுக்குத் தயாரான ‘சதுரங்க வேட்டை 2’
Updated on
1 min read

நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவந்த ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடிப்பில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சதுரங்க வேட்டை 2’ கதையை ஹெச்.வினோத் எழுத என்.வி.நிர்மல்குமார் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதாரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு சிக்கல்களால் வெளியீட்டுக்குத் தயாராகாமல் இழுபறியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இப்படம் வரும் ஜனவரி 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஆன்ஸ்கை நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைக்க கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in