ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ - படப்பிடிப்பு தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ - படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரெபெல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்மெண்ட் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் இப்படத்துக்கு ‘ரெபெல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (டிச.02) பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் நிகேஷ் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது ஆக்செஸ் பிலிம் ஃபாக்டரி தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பேச்சிலர்’ படம் நாளை (02.12.21) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஜெயில்’ படமும் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in