முகேன் ராவ் நடிக்கும் ‘மதில் மேல் காதல்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

முகேன் ராவ் நடிக்கும் ‘மதில் மேல் காதல்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

முகேன் ராவ் நடிக்கும் ‘மதில் மேல் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் முகேன் ராவ். தற்போது கவின் இயக்கத்தில் ‘வேலன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் பிரபு,சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

இப்படத்தைத் தொடர்ந்து நானி, நித்யா மேனன் நடிப்பில் ‘வெப்பம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஞ்சனா அலிகான் இயக்கும் ஒரு படத்தில் முகேன் ராவ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மதில் மேல் காதல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஷீரடி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் முகேனுடன் திவ்ய பாரதி, சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கவுதம் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in