

விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ் பணிகளை செய்துதரும் கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்முறையாக ‘வனம்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில், ‘ஜீவி’படப் புகழ் வெற்றி, நாயகனாகவும் அனுசித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் நாயகிகளாகவும் நடிக்க, வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மறுபிறவிக் கதையான இதில், 60-களின் காலகட்டமும், சமகாலமும் கதைக் களமாக இடம்பெறுகின்றன. ‘‘இயற்கை பாதுகாப்பு, பழங்குடி மக்கள் பாதுகாப்பு இரண்டும் படத்தின் அடிநாதம். ஹாலிவுட் தரத்தில் கிராஃபிக்ஸ் இருக்கும். ‘மாயா’ படத்தின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹான் மிரட்டியிருக்கிறார்” என்கிறார் இயக்குநர்.