சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Updated on
1 min read

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.

இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று (நவ.10) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இறுதிகட்ட பணிகளை முடித்து அடுத்த ஆண்டு படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in