10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள் - முழுப் பட்டியல்

நடிகர் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு விருது
10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள் - முழுப் பட்டியல்
Updated on
3 min read

புதுடெல்லி: நாட்​டின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்​கப்​பட்​டன. சிறந்த தேசிய நடிக​ராக மலை​யாள நடிகர் மம்மூட்​டி, கார்த்​திக் ஆர்​யன் ஆகியோ​ரும், சிறந்த நடிகை​யாக யாமி கவுத​மும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்​கள் அள்​ளி​யுள்​ளன. சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்​தி​யா​வில் சிறந்த திரைப்​படங்​கள், சிறந்த நடிகர்​கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரு​கின்​றன. சிறந்த திரைப்பட இயக்​குநர், சிறந்த ஒளிப்​ப​திவு, சிறந்த ஒலி வடிவ​மைப்​பு, சிறந்த பின்​னணி இசை போன்ற பல துறை​களுக்​கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்​திய சினி​மா​வில் பல்​வேறு பிரிவு​களில் சிறந்த கலை பங்​களிப்​பு​களை அங்​கீகரிக்​கும் வகை​யில் தேசிய விருதுகள் மிக​வும் மதிக்​கப்​படும் விருதுகளில் ஒன்​றாகக் கருதப்படு​கிறது.

இந்​நிலை​யில், 2024-ம் ஆண்​டில் வெளி​யான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்​கப்​பட்​டன. மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்புத்துறை அமைச்​சகம் டெல்​லி​யில் நேற்று இந்த விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறி​வித்​துள்​ளது.

இந்த விருதுகளைத் தேர்வு செய்ய பிரபல மலை​யாள திரைப்பட இயக்குநர் ஜெய​ராஜ் தலை​மை​யில் 11 பேர் கொண்ட மத்​திய நடுவர் குழு அமைக்​கப்​பட்டு இருந்​தது. நடு​வர் குழு​வின் பரிந்துரையின் பேரில் இந்த விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்​டுள்​ளன. கடந்த 2024-ம் ஆண்​டின் சிறந்த படமாக ‘ஆர்ட்​டிக்​கிள் 370’ தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

சிறந்த தேசிய நடிகர் விருதை நடிகர் மம்​மூட்​டி​யும், இந்தி நடிகர் கார்த்​திக் ஆர்​யனும் இணைந்து பெறுகின்​றனர். பிரம்​ம​யுகம் படத்தில் நடித்​ததற்​காக மம்​மூட்​டிக்​கும், சந்து சாம்​பியன் படத்தில் நடித்​ததற்​காக நடிகர் கார்த்​திக் ஆர்​யனுக்​கும் விருது பகிர்ந்து வழங்கப்​பட​வுள்​ளது. ஆர்ட்​டிக்​கிள் 370 இந்​திப் படத்​தில் நடித்ததற்காக நடிகை யாமி கவுத​முக்கு சிறந்த நடிகைக்​கான தேசிய விருது வழங்​கப்​பட​வுள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்​டுக்​கான விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள் கிடைத்​துள்​ளன. இதில் சிவ​கார்த்​தி​கேயன், சாய் பல்​லவி நடித்த அமரன் படத்​துக்கு 3 விருதுகள் கிடைத்​துள்​ளன. இந்​தப் படம் சிறந்த இயக்​குநர், சிறந்த பின்​னணி இசை, சிறந்த எடிட்​டிங் பிரிவு​களில் விருதுகளை வென்​றது.

ராஜ்கு​மார் பெரிய​சாமி

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரத​ராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய​மாக வைத்து இயக்கிய, அமரன் திரைப்​படத்துக்காக சிறந்த இயக்​குநருக்​கான தேசிய விருதை இயக்குனர் ராஜ்கு​மார் பெரிய​சாமி வென்​றுள்​ளார். சிறந்த பின்​னணி இசைக்காக ஜி.​வி.பிர​காஷ் குமாருக்​கும், சிறந்த எடிட்​டிங் பிரி​வில் ஆர்​.கலை​வாணனுக்​கும் விருது வழங்கப்​பட​வுள்​ளது.

கேப்​டன் மில்​லர் படத்​துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்​துள்​ளன. கேப்​டன் மில்​லர் படத்​தில் சிறப்​பாக நடித்​ததற்​காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்​கான (சிறப்​புப் பிரிவு) தேசிய விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், தேசிய, சமூக மற்​றும் சுற்​றுச்​சூழல் மதிப்​பீட்​டுக்​கான படமாக ‘கேப்​டன் மில்​லர்’ தேர்ந்தெடுக்கப்​பட்​டு, அதன் இயக்​குநர் அருண் மாதேஸ்​வரனுக்கு விருது அறிவிக்கப்​பட்​டுள்​ளது.

ராயன் படம்

அதே​போல் தமிழில் சிறந்த படமாக நடிகர் தனுஷ், நடிகை துஷாரா விஜயன் நடித்த ராயன் படத்​துக்​குக் கிடைத்​துள்​ளது.

மெய்​யழகன்

நடிகர்​கள் அரவிந்த்​சாமி, கார்த்தி நடித்த திரைப்​பட​மான ‘மெய்யழகன்’ (சிறப்​புப் பிரிவு) படத்​துக்கு சிறந்த ஒலிக்​கலவைக்கான (சவுண்ட் மிக்ஸ் டிசைன்) விருது சுரேன். ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஜா படத்​துக்கு 2 விருது

நடிகர்​கள் விஜய் சேதுபதி உள்​ளிட்​டோர் நடித்த மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்​துள்​ளன. சிறந்த துணை நடிகை பிரி​வில் சச்​சனா நமி​தாஸும், சிறந்த சண்​டைப் பயிற்சியாள​ருக்​கான பிரி​வில் அனல் அரசு​வும் இந்த விருதைப் பெறவுள்​ளனர்.

அதே​போல் புளூ என்ற தமிழ்ப் படத்​துக்கு (நான் ஃபீச்​சர் பிரிவு) சிறந்த ஒலி வடிவ​மைப்​புக்​கான (பெஸ்ட் சவுண்ட் டிசைன்) விருதை ஹரிஹர சுதன் பெறவுள்​ளார்.

மம்மூட்டிக்கு 4-வது தேசிய விருது

பிரம்மயுகம் படத்துக்காக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் மம்மூட்டி 4-வது முறையாக தேசிய விருதைப் பெறுகிறார். இதற்கு முன்பு 1989-ல் வெளிவந்த ஒரு வடக்கன் வீரகதா, மதிலுகள் படத்துக்காக முதல் முறையும், 1994-ல் வெளிவந்த பொந்தன் மாடா, விதேயன் படங்களுக்காக 2-வது முறையும், 1999-ல் வெளிவந்த டாக்டர் அம்பேத்கர் படத்துக்காக 3-வது முறையும் தேசிய விருதை மம்மூட்டி பெற்றுள்ளார்.

10 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள் - முழுப் பட்டியல்
QALA: ஆணாதிக்கம் தரித்த தாயும், ‘கண்ணீர் சாட்சி’ கலாவும் | திரை தேவதைகள் 27

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in