இந்தியா - பாக். எல்லையில் அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியா - பாக். எல்லையில் அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்

Published on

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரோஷி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அஜித்துக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது பொழுதுபோக்காகும். சமீபத்தில் 'வலிமை' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஷ்யா நாட்டில் நீண்ட தூரம் பயணித்தார். மேலும், உலக அளவில் பைக்கில் பயணிப்பதற்கும் தயாராகி வருகிறார்.

இதனிடையே, தற்போதுள்ள ஓய்வை முன்வைத்து பைக்கில் நீண்ட தூரம் பயணித்து வருகிறார். இதில் இந்தியா - பாக். எல்லை வரைச் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய ராணுவ வீரர்கள் பலரும் அஜித்துடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in