மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - விதார்த்

மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - விதார்த்
Updated on
1 min read

மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விதார்த் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை முருகானந்தம் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படம் முடிவாகியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, விதார்த் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களுடன் நடிக்கவுள்ளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தையும் முருகானந்தமே தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in