இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய வீரமே வாகை சூடும்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய வீரமே வாகை சூடும்
Updated on
1 min read

விஷால் நடித்துவரும் 'வீரமே வாகை சூடும்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வீரமே வாகை சூடும்'. இதில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளர் யுவன் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முழுக்க இரவில் சில முக்கியக் காட்சிகளைச் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி வருகிறார்கள். இதன் வீடியோ உருவாக்கத்தைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் விஷால்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கியுள்ளது படக்குழு. டிசம்பரில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in