வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் 'அநீதி' 

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் 'அநீதி' 

Published on

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு 'அநீதி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'ஜெயில்' படத்துக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்கி வந்தார் வசந்தபாலன். இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமல் முழுக்க படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தியது படக்குழு. இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், தலைப்பை அறிவிக்கும் வகையில் படத்தின் சிறிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு 'அநீதி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை சிவகார்த்திகேயன் மற்றும் பிசிஸ்ரீராம் இணைந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in