'மகான்' அப்டேட்: துருவ் விக்ரம் லுக் வெளியீடு

'மகான்' அப்டேட்: துருவ் விக்ரம் லுக் வெளியீடு
Updated on
1 min read

'மகான்' படத்திலிருந்து துருவ் விக்ரமின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மகான்'. லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்திலிருந்து விக்ரமின் லுக்கை மட்டுமே வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, துருவ் விக்ரமின் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் போஸ்டரின் மூலம் படத்திலும் விக்ரமுக்கு மகனாக தாதா என்ற கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. 'ஆதித்ய வர்மா' படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் இது. ஆகையால், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'மகான்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in