அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் த்ரில்லர்

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் த்ரில்லர்
Updated on
1 min read

அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து த்ரில்லர் படமொன்றில் நடிக்கவுள்ளார்கள்.

தமிழில் 'டிரைவர் ஜமுனா', 'மோகன் தாஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பூமிகா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அர்ஜுனுடன் இணைந்து புதிய த்ரில்லர் கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் அர்ஜுன் காவல்துறை விசாரணை அதிகாரியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியையாகவும் நடிக்கவுள்ளனர்.

தினேஷ் லட்சுமணன் இயக்கவுள்ள இந்தப் படத்தினை ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in