செப்.17-ல் வெளியாகிறதா 'இடியட்'?

செப்.17-ல் வெளியாகிறதா 'இடியட்'?
Updated on
1 min read

ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'இடியட்' திரைப்படம் இம்மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இடியட்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தபோது, ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் நேரடி ஓடிடி வெளியீட்டு முடிவை மாற்றியுள்ளது படக்குழு.

இம்மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை 7ஜி சிவா கைப்பற்றியுள்ளார். செப்டம்பர் 17-ம் தேதி வெளியிடப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in