'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பு தேதி அறிவிப்பு

'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பு தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சன் டிவியில் 'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததால் நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தொலைக்காட்சி உரிமை சன் டிவியிடம் இருந்ததால் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு பின்பு ஓடிடியில் வெளியீடு என்ற முடிவை எடுத்தது 'துக்ளக் தர்பார்' படக்குழு. இதனை தொடர்ந்து சன் டிவியில் எப்போது ஒளிபரப்பு என்ற கேள்வி எழுந்தது.

செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் 'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான விளம்பரங்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. செப்டம்பர் 11-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'துக்ளக் தர்பார்' வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in