சோழ மன்னர் கதையில் அஜித்: எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி

சோழ மன்னர் கதையில் அஜித்: எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி
Updated on
1 min read

அஜித்துக்காக பணியாற்றி வரும் கதை சோழ மன்னரைப் பற்றியது என்று எழுத்தாளர் பாலகுமாரன் தெரிவித்திருக்கிறார்.

'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களில் அஜித்தை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அவருடைய இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யட்சன்' போதிய வரவேற்பைப் பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் விஷ்ணுவர்தன், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். இதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும், இப்படத்தின் நாயகனாக அஜித் நடிக்கவிருப்பதாகவும் அனைத்தும் முடிவானவுடன் முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

"அஜித்குமாருக்காக கதை எழுதுவது உண்மைதான். ஆனால் தஞ்சை பெரியகோயில் பற்றிய கதையோ, ராஜராஜ சோழனைப் பற்றிய கதையோ அல்ல. ஆனால் ஒரு சோழ மன்னரைப் பற்றிய கதை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்" என்று இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணியாற்றுவது குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் தெரிவித்திருக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in