பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா

பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா
Updated on
1 min read

பா.விஜய் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதில் 'பொன்மாணிக்கவேல்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பிரபுதேவா.

தற்போது அந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபுதேவா. இதனை பா.விஜய் இயக்கவுள்ளார். 'ஸ்ட்ராபெர்ரி', 'ஆருத்ரா' ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.விஜய் இயக்கும் படமாக இது அமையவுள்ளது.

இந்தப் படம் க்ரைம் மற்றும் ஹாரர் த்ரில்லராக உருவாகவுள்ளது. இதில் மஹிமா நம்பியார், கலையரசன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் பிரபுதேவா உடன் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தீபக் குமார், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ஷான் லோகேஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in