வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்

வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்
Updated on
1 min read

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நாயகியாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்து, பலரது பாராட்டையும் பெற்ற துஷாரா நடித்து வருகிறார். தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in