ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா

Published on

ஆர்.கண்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'தள்ளிப் போகாதே', ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக் ஆகிய படங்களை முடித்துள்ளார் இயக்குநர் கண்ணன். இதில் 'தள்ளிப் போகாதே' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் இயக்குநர் கண்ணன். தற்போது இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி, 40 நாட்களில் ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் கண்ணன் திட்டமிட்டுள்ளார் .

விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in