ஆலோசிக்கும் வாரிசுகள்

ஆலோசிக்கும் வாரிசுகள்
Updated on
1 min read

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், நடிகர் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். நால்வரும் அவ்வப்போது சந்தித்து சினிமா தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொள்வதும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிப்பதும் வழக்கம். கரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த நட்புக்கு இடைவெளி விழுந்துவிடக் கூடாது என ‘ஜூம்’ உள்ளிட்ட தளங்கள் மூலமாக வாரம் 2 முறை ஆன்லைனில் சந்தித்து, சினிமா மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். மிக விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படைப்பு ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in