Published : 08 Jun 2021 16:55 pm

Updated : 08 Jun 2021 18:52 pm

 

Published : 08 Jun 2021 04:55 PM
Last Updated : 08 Jun 2021 06:52 PM

ரஜினி ஸ்டைலை நானும் பின்பற்ற முயல்வது இயற்கையே: தனுஷ்

dhanush-speech-at-jagame-thandhiram-twitter-spaces

சென்னை

ரஜினி ஸ்டைலை நானும் பின்பற்ற முயல்வது இயற்கையே என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நேற்று (ஜூன் 7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இதனை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள்.

இதில் தனுஷும் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 'ஜகமே தந்திரம்' படத்தில் ரஜினியின் சைகைகளைப் பின்பற்றியிருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனுஷ் கூறியிருப்பதாவது:

"பொதுவாகவே, நான் பெரிய ரஜினி ரசிகன். எனவே அவரது ஸ்டைலை நானும் பின்பற்ற முயல்வது இயற்கையே. ஆனால், எப்படியோ மற்ற படங்களில் முடிந்தவரை அதைக் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டேன். ஆனால் ’ஜகமே தந்திரம்’ படத்தில் அதில் சில சைகைகளை கார்த்திக் சுப்புராஜ் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவரும் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர்".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

ரஜினி ஸ்டைல்தனுஷ்தனுஷ் பகிர்வுதனுஷ் பேச்சுதனுஷ் பேட்டிஜகமே தந்திரம்கார்த்திக் சுப்புராஜ்One minute newsRajini styleDhanushDhanush speechDhanush interviewJagame thandhiramKarthik subbaraj

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x