Published : 31 May 2021 17:12 pm

Updated : 31 May 2021 20:31 pm

 

Published : 31 May 2021 05:12 PM
Last Updated : 31 May 2021 08:31 PM

ஓடிடியில் வெளியாகிறதா 'ராக்கி'?

rocky-in-ott

சென்னை

ஓடிடியில் நேரடியாக வெளியிட 'ராக்கி' படக்குழுவினரிடம் பல்வேறு ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.


'ராக்கி' படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது. விக்னேஷ் சிவன் - அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அதை வைத்து இந்தப் படத்தைப் பார்த்து உரிமையைக் கைப்பற்றியுள்ளார்கள்.

இதனிடையே, படத்தின் வெளியீடு குறித்துப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட போதுதான் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது.

தற்போது தயாராகியுள்ள படங்கள் அனைத்துக்கும் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் 'ராக்கி' படமும் இணைந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

'ராக்கி' படத்தின் டீஸர்கள், ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை முன்வைத்து அருண் மாதேஸ்வரன் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்கள்.

தவறவிடாதீர்!

RockyRocky in ottVasanth raviNayantharaVignesh shivanRocky releaseBharathirajaArun matheshwaranOne minute newsராக்கிஓடிடியில் ராக்கிவசந்த் ரவிநயன்தாராவிக்னேஷ் சிவன்ராக்கி வெளியீடுபாரதிராஜாஅருண் மாதேஸ்வரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x