மீண்டும் ஓர் உண்மை சம்பவம்

ஆத்மிகா
ஆத்மிகா
Updated on
1 min read

விஜய் ஆன்டனி, ஆத்மிகா நடிப்பில் ‘மெட்ரோ’ படத்தின் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தின் முழு பணிகளும் நிறைவுபெற்றன.

பாசப் பின்னணியில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படத்தை ஆக்‌ஷன் கலந்து எடுத்துள்ளார். படத்தில் கணினி தொழில்நுட்பம் தொடர்பானபணிகளும் சில வாரங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், படவெளியீடு தொடர்பான பணிகளில் தயாரிப்புக் குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, புதிய கதையை எழுதி முடிப்பதில் தீவிரமாக உள்ளார் ஆனந்தகிருஷ்ணன். ‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ போல இதுவும் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது. ஆக்‌ஷன், க்ரைம் கலந்த த்ரில்லர். பெரும்பாலான எழுத்துப் பணி முடிந்துள்ளது. கதை தொடர்பாக சில ஆய்வு நடந்து வருகிறது என்கிறார் ஆனந்தகிருஷ்ணன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in