’தனி ஒருவன்’ ராஜாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்

’தனி ஒருவன்’ ராஜாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

'தனி ஒருவன்' வெற்றியைத் தொடர்ந்து 'ஜெயம்' ராஜா இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

'ஜெயம்' ராஜாவின் 'தனி ஒருவன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பைப் பெற்றது. இந்நிலையில், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார் 'ஜெயம்' ராஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்தகவலை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக இணை சேர்ந்துள்ள இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்து வருகிறார்.

'ஜெயம்' ராஜா படக் குழு பற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in