தேர்தல் திருவிழா: வரிசையில் நின்று வாக்களித்த சிவகார்த்திகேயன்

தேர்தல் திருவிழா: வரிசையில் நின்று வாக்களித்த சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளியில் சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் காலை முதலே அவரவர் தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்தியேன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''ஒரு குடிமகனாக என்னுடைய கடமையைச் செய்துவிட்டேன். ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் இன்று நம் கடமையைச் செய்யப் போகிறோம் என்ற உற்சாகம் இருக்கும். இம்முறையும் அதைச் செய்திருக்கிறேன்''.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in