சிம்புவுடன் நடிக்கும் புகழ்?

சிம்புவுடன் நடிக்கும் புகழ்?
Updated on
1 min read

'மாநாடு' படத்தில் சிம்புவுடன் புகழ் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது அச்செய்தியில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. இதன் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

தற்போது சென்னையில் பிரம்மாண்டமான மாநாடு போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் பங்கேற்று நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தினமும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் சிம்புவுடன் 'குக் வித் கோமாளி' புகழும் சில புகைப்படங்களில் நின்று கொண்டிருந்தார். இதனை வைத்துப் பலரும் 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் புகழும் நடித்து வருகிறார் என்று செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக விசாரித்தபோது, " 'மாநாடு' அரங்கம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில்தான் 'குக் வித் கோமாளி' அரங்கம் அமைந்துள்ளது. சிம்பு இருக்கிறார் என்பதைத் தெரிந்து புகழ் வந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் படத்தில் நடிக்கவில்லை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்" என்று தெரிவித்தார்கள்.

இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த 'மாநாடு' படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in