சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம்

சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம்
Updated on
1 min read

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் வினய் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்டும் ஓய்வில் இருக்கும் சூர்யா, விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாயகியாக ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு முதற்கட்டப் படப்பிடிப்பும் முடிவுற்றது.

இந்நிலையில், தற்போது சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் கதைப்படி முக்கியமான வில்லனாக வினய் இருப்பார் எனத் தெரிகிறது. இதர வில்லன்கள் யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in