

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு 'தெறி' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.
விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார். விஜய் - சமந்தா ஜோடிக்கு நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்து வருகிறார்.
இப்படத்துக்கு 'காக்கி', 'வெற்றி', 'தெறி' ஆகிய பெயர்கள் பரிசீலக்கப்பட்டு இறுதியாக 'தெறி' என்ற தலைப்பை இறுதி செய்திருக்கிறார்கள்.
ட்விட்டர் தளத்தில் 'தெறி' என்று தலைப்போடு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு இருக்கிறார்கள்.