மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பில்லா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பில்லா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்

Published on

அஜித் நடித்த 'பில்லா' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஜித், நயன்தாரா, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் ‘பில்லா’. விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் 1980ஆம் ரஜினி நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தின் ரீமேக் ஆகும். பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் 2012ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை சக்ரி டோலெட்டி இயக்கியிருந்தார். ஆனால், முதல் பாகம் அளவுக்கு இப்படம் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு ‘பில்லா’ திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி அன்று மீண்டும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தகவலை அஜித் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 2010ஆம் இப்படம் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தற்போது இப்படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர்.

இந்நிலையில், அஜித்தின் ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in