சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' - 'ராஜவம்சம்' படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' - 'ராஜவம்சம்' படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'ராஜவம்சம்' படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அனீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். இதில் பிந்து மாதவி, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு முன்னதாக சசிகுமார் நடிப்பில் 'ராஜவம்சம்', 'எம்.ஜி.ஆர் மகன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா' உள்ளிட்ட படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து நிலைமை சீராவதற்காகப் படக்குழுவினர் காத்திருந்தனர்.

தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'ராஜவம்சம்' திரைப்படம் மார்ச் 12-ம் தேதியும், பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படம் எப்ரல் 23-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in