Published : 16 Feb 2021 11:17 am

Updated : 16 Feb 2021 11:17 am

 

Published : 16 Feb 2021 11:17 AM
Last Updated : 16 Feb 2021 11:17 AM

மீண்டும் இணையும் 'வலிமை' கூட்டணி?

valimai-team-join-hands-again

சென்னை

மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் எனத் தெரிகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தன. விரைவில் வெளிநாட்டில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இந்தப் படத்தை ஹெச்.வினோத்தே இயக்குவார் எனத் தெரிகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'வலிமை' படம் வெளியானவுடன்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி இறுதியானால், சிவாவைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 3 அஜித் படங்களை இயக்கும் இயக்குநராக ஹெச்.வினோத் வலம் வருவார்.

தவறவிடாதீர்!


வலிமைவலிமை கூட்டணிஹெச்.வினோத்அஜித்போனி கபூர்One minute newsValimaiValimai teamHvinothAjithBoney kapoor

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x