அருண் விஜய் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்

அருண் விஜய் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம்
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அருண் விஜய். இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராமசந்திர ராஜூ, ஜெயபாலன், ராஜேஷ், ஐஸ்வர்யா, புகழ், இமான் அண்ணாச்சி, ரமா உள்ளிட்ட பலர் இதில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதில் மட்டும் ரகசியம் காத்து வந்தது படக்குழு.

தற்போது இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் பாடல் பதிவு பணிகள் தொடங்கப்படவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in