'எனிமி' அப்டேட்: ஆர்யாவின் லுக் வெளியீடு

'எனிமி' அப்டேட்: ஆர்யாவின் லுக் வெளியீடு
Updated on
1 min read

'எனிமி' படத்தில் ஆர்யாவின் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எனிமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது சென்னையில் அரங்குகள் அமைத்து முக்கியமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. இதில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி, ஆர்யாவுக்கு நாயகியாக மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக, 'எனிமி' படத்தில் விஷாலின் லுக்கை வெளியிட்டது படக்குழு. தற்போது வில்லனாக நடித்துவரும் ஆர்யாவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. முதன்முறையாக விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க வெளிநாட்டுக்குப் பயணிக்கவுள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in