Published : 01 Feb 2021 16:00 pm

Updated : 01 Feb 2021 16:00 pm

 

Published : 01 Feb 2021 04:00 PM
Last Updated : 01 Feb 2021 04:00 PM

ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது சுல்தான்

sulthan-movie-release-plan

சென்னை

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதன் டீஸர் இன்று (பிப்ரவரி 1) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.


முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த இந்தப் படம், தற்போது திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 'சுல்தான்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.

தவறவிடாதீர்!


இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்கார்த்திராஷ்மிகா மந்தனாசுல்தான்சுல்தான் வெளியீடுசுல்தான் வெளியீட்டுத் தேதிOne minute newsKarthiSulthanSulthan releaseSulthan release plan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x