Published : 19 Jan 2021 04:52 PM
Last Updated : 19 Jan 2021 04:52 PM

'களத்தில் சந்திப்போம்' வெளியீட்டுத் தேதி முடிவு

சென்னை

'களத்தில் சந்திப்போம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸின் 90-வது படம் 'களத்தில் சந்திப்போம்'. இதில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன. அந்த வரிசையில் 'களத்தில் சந்திப்போம்' திரைப்படமும் ஜனவரி 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x