‘மாஸ்டர் படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது’ - தயாரிப்பாளர் டி.சிவா 

‘மாஸ்டர் படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது’ - தயாரிப்பாளர் டி.சிவா 
Updated on
1 min read

சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் ‘கபடதாரி’. நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஜி.தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (18.01.21) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

இதில் தயாரிப்பாளர் டி.சிவா பேசியதாவது:

சினிமா என்னாகுமோ, ஏதாகுமோ? திரையரங்குகள் திறக்கப்படுமா? மக்கள் கூட்டம் வருமா? போன்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று கபடதாரி ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in