விஜய் என்றவுடன் நினைவுக்கு வரும் வார்த்தை: மாளவிகா மோகனன் பகிர்வு

விஜய் என்றவுடன் நினைவுக்கு வரும் வார்த்தை: மாளவிகா மோகனன் பகிர்வு
Updated on
1 min read

விஜய் என்றவுடன் நினைவுக்கு வரும் வார்த்தை குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. நேற்று (ஜனவரி 13) இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழில் அவர் நாயகியாக நடித்துள்ள முதல் படம் 'மாஸ்டர்' என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு நாயகியாக நடித்தது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

அதில் "பட வெளியீடு பல முறை ஒத்தி வைக்கப்பட்ட வெறுப்பை எப்படிச் சமாளித்தீர்கள்?" என்ற கேள்விக்கு மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"விஜய் அவர்களைப் போல ஒருவர் குழுவில் இருப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். மலையாளத்தில் எனக்குப் பிடித்த வார்த்தை தைரியம். அவரைப் பற்றி நினைத்தால் அந்த வார்த்தை தான் எனக்குத் தோன்றுகிறது. படப்பிடிப்பு முழுவதும் நேர்மறையாக இருந்ததைத் தாண்டி ஊரடங்கு காலத்திலும் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு விமர்சனம் என்று எதாவது இருந்தால் அது ஆக்கப்பூர்வமானதாக மட்டுமே இருக்கும். ஒருவர் சிறக்க வேண்டும் என்பதால் மட்டுமே அவரிடம் அதைச் சொல்வார்"

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in