நட்புக்கு முக்கியத்துவம் தரும் விஜய்: ஸ்ரீமன் நெகிழ்ச்சி

நட்புக்கு முக்கியத்துவம் தரும் விஜய்: ஸ்ரீமன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

நட்புக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்று விஜய் உடனான சந்திப்பு குறித்து ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. நாளை (ஜனவரி 13) பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீமன். அவர் மட்டுமன்றி அவருடைய பழைய நண்பர்களும் இணைந்து நடித்துள்ளனர். இன்று (ஜனவரி 12) விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளார் ஸ்ரீமன்.

அந்தச் சந்திப்பு குறித்து ஸ்ரீமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"லவ் யூ! ஒரு நட்சத்திரம் தனது பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் எவ்வளவு வேலைகளில் இருப்பார் என்று எனக்குத் தெரியும். சந்திப்புக்கு இது சரியான நேரம் கிடையாது. ஆனாலும், அவரைச் சந்திப்பது எனக்கு முக்கியமாகப்பட்டது. எனவே நான் அழைத்து, என் தேவையை விளக்கினேன். அடுத்த வார்த்தை, "வா ஸ்ரீ" என்றார்.

நட்புக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. உங்கள் கனிவான இதயத்துக்கும், கடின உழைப்புக்கும் நீங்கள் ஜெயிப்பீர்கள்”.

இவ்வாறு ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in