Published : 11 Jan 2021 11:53 am

Updated : 11 Jan 2021 11:53 am

 

Published : 11 Jan 2021 11:53 AM
Last Updated : 11 Jan 2021 11:53 AM

பிப்ரவரியில் தொடங்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு

indian-2-shooting

கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கமலுக்கு மேக்கப் பிரச்சினை, படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் பல்வேறு தடைகள் ஏற்பட்டன.


கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி, 'விக்ரம்' படப்பிடிப்பு என கமல் பிஸியாகிவிட்டதால், 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது.

தற்போது லைகா நிறுவனம் பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட சில பேரிடம் பிப்ரவரியில் தேதிகள் வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 'இந்தியன் 2' படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது உறுதியாகிறது.

சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் கமல் மும்முரமாக இருப்பதால், இந்தப் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. அவர் இல்லாமல் உள்ள சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். தேர்தல் முடிந்தவுடன், 'இந்தியன் 2' படத்தை ஒரே கட்டமாக முடித்துக் கொடுத்துவிட்டு 'விக்ரம்' படத்தில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார் கமல்.

தவறவிடாதீர்!


இந்தியன் 2Indian 2 shootingIndian 2கமல்ஷங்கர்காஜல் அகர்வால்ரகுல் ப்ரீத் சிங்சித்தார்த்நெடுமுடி வேணுபாபி சிம்ஹாவிவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருலைகா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x