சென்னையில் 'ருத்ர தாண்டவம்' படப்பிடிப்பு தொடக்கம்

சென்னையில் 'ருத்ர தாண்டவம்' படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

'திரெளபதி' பட இயக்குநரின் அடுத்த படமான 'ருத்ர தாண்டவம்' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்டதால் பெரும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், மோகன்.ஜியின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

'ருத்ர தாண்டவம்' என்ற பெயரில் அடுத்த படத்தை இயக்கவுள்ளதை மோகன் உறுதிப்படுத்தினார். அதில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.

நேற்று (டிசம்பர் 4) சென்னையில் 'ருத்ர தாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in