

'ஆச்சி' என்று அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு ட்விட்டரில் நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு மனோரமா இறைவனடி சேர்ந்தார். நீண்ட நாட்களாகவே அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார்.
நடிகை ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பதிவில், “மனோரமா எனும் மகத்தான நடிகையுடன் நான் பணியாற்றியது எனது அதிர்ஷ்டம். மிகச்சிறந்த மனிதர். வீ மிஸ் யூ ஆச்சி” என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ்: மனோரமா ஆச்சி! நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. மிகப்பெரிய நடிகை, அவரிடமிருந்து நடிப்பு என்றால் என்னவென்பதைக் கற்றுக் கொண்டேன்.
சித்தார்த்: நிகரற்ற மிகப்பெரிய நடிகை. நீங்கள் அமைதியாக உறங்க பிரார்த்திக்கிறேன்.
நடிகர் மாதவன்: உங்களைச் சந்தித்தது எனது பாக்கியம். உங்களைப் பார்ப்பதில் சொர்க்கங்களும் அதிர்ஷ்டம் பெற்றுள்ளன.
குஷ்பு: தமிழ் சினிமா வரலாற்றில் இன்று மிகவும் துயரமான ஒரு தினம். ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் மனோரமா என்ற மிகப்பெரிய நடிகை நம்மிடையே இல்லை.
திரிஷா: ஆச்சி! உங்களுடன் பணியாற்றியது பெருமை அளிக்கிறது. மிகவும் எளிமையான, ஆச்சரியகரமான மனிதர்களில் நீங்கள் ஒருவர் என்பதாகவே நான் உங்களை அறிகிறேன்.
சாமி திரைப்படத்தில் மனோரமாவுடன் பணியாற்றினார் திரிஷா.