அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் இணையும் புதிய படம்

அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் இணையும் புதிய படம்
Updated on
1 min read

அசோக் செல்வனுக்கு நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களைத் தயாரித்தும், விநியோகித்தும் வரும் நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' படத்தை விநியோகம் செய்திருந்தது. விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' படத்தைக் கடைசியாகத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் தங்களுடைய தயாரிப்பில் புதிய படமொன்றைத் தொடங்கியுள்ளது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 'சதுரம் 2' இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

இதில் நாயகனாக அசோக் செல்வன், நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டராக ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளார். சென்னையில் இன்று(டிசம்பர் 14) இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in